தொழிலதிபராக மாறும் பிரபல பாலிவுட் நடிகை! என்ன காரணம்?
நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் 2006-ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இவர் பாலிவுட்டில் முதன்முறையாக சாருக்கானுடன் இணைந்து நடித்ததால் இவரது புகழ் வேகமாக பரவியது.
படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே, 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், இவர் தொழில் தொடங்குவதில் ஆர்வம் வருகிறார்.
இந்நிலையில், தொழில் தொடங்குவதற்காக சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் ,அவரது தாய்வீட்டு உறவினரின் ஒத்துழைப்போடு இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இவர் தொழிலதிபராக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.