சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை.?
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும், நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, அஜித்தை வைத்து வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாவே தகவல்கள் பரவி கொண்டே தான் வருகிறது.
விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான மஹிரா ஷர்மா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.