கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை..!

Published by
பால முருகன்

பிரபல பாலிவுட் நடிகையான மலைகா அரோரா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியன் “உயிரே” படத்தில் தக்க தைய தைய பாடலுக்கு ரயில் மீது நடனம் செய்தது மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், நேற்று நடிகை மலைக்கா அரோரா நேற்று இரவு கார் விபத்தில் சிக்கினார். நேற்று புனேயில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது ரேஞ்ச் ரோவர் காரில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மலைகா அரோரா காருக்கு முன்னாள் சென்ற கொண்டிருந்த சுற்றுலா வாகனம் ஒன்று புனே செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென பிரேக் செய்து நிறுத்தப்பட்டது. இதனால், மலைகா அரோரா காரும், அவரது காருக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வாகனமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மூன்று வாகனங்களில் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. நடிகை மலைகா அரோராவிற்கு லேசாக தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, மலைக்காவின் உடல் நிலை குறித்து அவரது  சகோதரி அம்ரிதா பேசியுள்ளார். அவர் கூறியதாவது “மலைக்கா உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. தலையில் லேசாக அடிபட்டுள்ளதால். மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். இன்னும் சிறிது நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பிறகு இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நினைக்கிறேன். சிடி ஸ்கேன் முடிவுகளில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே வந்துள்ளது. ” என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மனைவி முன் ஹீரோவாக வேண்டுமா? ‘நானும் ரவுடி தான்’ பாணியில் வினோதமாக பணம் வசூலிக்கும் நபர்!

மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…

1 hour ago

ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விலகல்!

டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார்.  முழு…

2 hours ago

‘தனது பிறந்தநாள் அன்று ட்ரிபிள் ட்ரீட்’… பெரிய அறிவிப்பை வெளியிட்ட சிலம்பரசன்.!

சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ்…

2 hours ago

சச்சின் முதல் அஸ்வின் வரை.. பத்மஸ்ரீ வென்ற கிரிக்கெட் வீரர்கள்..!

டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்…

3 hours ago

பொது சிவில் சட்டம் அமல்., மீறினால் சிறை, அபராதம்! உத்தரகாண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!

டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.…

3 hours ago

முருக பக்தர்கள் கவனத்திற்கு.., பழனி தைப்பூசத் திருவிழா அப்டேட்!

திண்டுக்கல் : இந்து கடவுள் முருக பெருமானுக்கு முதன்மையாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கிய நிகழ்வாக உள்ள தைப்பூசத் திருவிழா ஆண்டு…

4 hours ago