கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை..!
பிரபல பாலிவுட் நடிகையான மலைகா அரோரா பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியன் “உயிரே” படத்தில் தக்க தைய தைய பாடலுக்கு ரயில் மீது நடனம் செய்தது மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், நேற்று நடிகை மலைக்கா அரோரா நேற்று இரவு கார் விபத்தில் சிக்கினார். நேற்று புனேயில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது ரேஞ்ச் ரோவர் காரில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மலைகா அரோரா காருக்கு முன்னாள் சென்ற கொண்டிருந்த சுற்றுலா வாகனம் ஒன்று புனே செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென பிரேக் செய்து நிறுத்தப்பட்டது. இதனால், மலைகா அரோரா காரும், அவரது காருக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வாகனமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மூன்று வாகனங்களில் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. நடிகை மலைகா அரோராவிற்கு லேசாக தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, மலைக்காவின் உடல் நிலை குறித்து அவரது சகோதரி அம்ரிதா பேசியுள்ளார். அவர் கூறியதாவது “மலைக்கா உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. தலையில் லேசாக அடிபட்டுள்ளதால். மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். இன்னும் சிறிது நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பிறகு இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நினைக்கிறேன். சிடி ஸ்கேன் முடிவுகளில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே வந்துள்ளது. ” என்று கூறியுள்ளார்.