ஸ்டாண்ட் அப் காமெடியனாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா இந்தி படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். பிறகு பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்தார்.
இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டிரெட்மில்லில் ஓடும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ராஜு ஸ்ரீவஸ்தவா மயங்கி விழுந்தாராம். அப்போது அவரது மனைவி அவரின் தலையைத் தொட்டபோது கால்களில் சிறிது அசைவு ஏற்பட்டதைத் தவிர, வேறெந்த அசைவும் இல்லாமல் இருந்தார்.
உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சுயநினைவின்றி இருந்தார். 41 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…