Silk Smitha 1990 காலகட்டத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருக்கு நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை இளைஞர்களின் ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக இருக்கிறார்கள். இருப்பினும் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த காலத்திலே சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இந்நிலையில், சில்க் ஸ்மிதா பற்றி பல பிரபலங்களும் பேட்டிகளில் பேசுவது உண்டு. அந்த வகையில், பிரபல நடிகையான ஜெயமாலினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா செய்த தவறு ஒன்றை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய ஜெயமாலினி ” சினிமாவில் நுழைந்த பலருக்கும் சில்க் ஸ்மிதாவுக்கு கிடைத்த வரவேற்பை போல வரவேற்பு கிடைத்தது இல்லை. சில்க் ஸ்மிதா அக்காவுடன் நான் பல படங்களில் நடித்து இருக்கிறேன்.
ஆனால், ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எல்லாம் அவ்வளவு என்னுடன் பேசிக்கொள்ளமாட்டார். நல்ல நிலையில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொண்டது இப்போது நினைத்தால் கூட எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தற்கொலை செய்தது அது அவள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்று நான் சொல்வேன்.
என்னைப்பொறுத்தவரை காதலிப்பது தவறில்லை ஆனால் பெற்றோரை விட்டு விலகக்கூடாது. ஏனென்றால் சில்க் ஸ்மிதா தான் காதலித்தவரை கண்மூடித்தனமாக நம்பினார். அவர் ஏமாற்றினார். பெற்றோர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் அந்த தவறான முடிவை எடுத்து இருக்க மாட்டார். சொந்தம் இல்லையென்றால் ஏமாற பலர் தயாராக இருக்கிறார்கள். சில்க் சுமிதா அப்படித்தான் ஏமாந்துவிட்டார்” என்றும் நடிகை ஜெயமாலினி வேதனையுடன் பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…