Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் தனக்கு நிறைய அட்வைஸ் செய்து நான் கேட்கவில்லை என நடிகை கௌசல்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் பிரபலங்கள் பண உதவி கேட்டபோது செய்தது மட்டுமின்றி பல பிரபலங்களுக்கு சினிமாவில் முன்னேற தன்னால் முடிந்த அட்வைஸ்களையும் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில், 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்த கௌசல்யாவுக்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர தன்னால் முடிந்த அட்வைஸ்களையும் செய்து இருக்கிறாராம்.
ஆனால், விஜயகாந்த் எவ்வளவோ அட்வைஸ் செய்தும் நடிகை கௌசல்யா காது கொடுத்து கூட கேட்கவில்லையாம். இந்த தகவலை நடிகை கௌசல்யாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு சினிமாவில் கிடைத்த நண்பர் கேப்டன் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் அவர் எனக்கு ரொம்பவே அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்.
ஒரு முறை என்னிடம் அமர்ந்து நீ முன்னணி நடிகையாக வளர வேண்டும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் சில விதிகளுக்கு சம்மதம் தெரிவித்து தான் ஆகவேண்டும். அதனை போலவே, சில இடங்களில் நீ சற்று அமைதியாக இருப்பது தவறான ஒரு விஷயம். வேண்டும் என்றால் இடத்தில் நீ உன்னுடைய குரலை கொடுக்கவேண்டும் என்று அட்வைஸ் செய்தார். ஆனால், நான் அவருடைய பேச்சை கேட்கவில்லை.
என்னுடைய குணம் எப்போதும் தனியாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன். சில சமயங்களில் நான் யார் பேச்சையும் கேட்கவே மாட்டேன். எனவே இதெல்லாம் சுட்டிக்காட்டி என்னிடம் யாருமே பேசியது இல்லை. முதன் முறையாக கேப்டன் விஜயகாந்த் தான் என்னிடம் கூறினார். அட்வைஸ் செய்வதில் பல விதம் இருக்கிறது. சிலர் அட்வைஸ் செய்தால் நமக்கு எரிச்சல் வரும்.
ஆனால், கேப்டன் விஜயகாந்த் அட்வைஸ் செய்வது எல்லாருக்கும் பிடிக்கும். அவர் அட்வைஸ் செய்வதை பார்த்தால் நமக்கு கோபமே வராது. அந்த அளவுக்கு மனதிற்கு பிடிக்கும் படி அவர் அட்வைஸ் செய்வார். இருப்பினும் அவருடைய அட்வைஸை நான் கேட்கவில்லை” எனவும் நடிகை கௌசல்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் கௌசல்யா விஜயகாந்துடன் வானத்தைப்பொல, தேவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…