அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகை!
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ஓ பேபி என்ற தெலுங்கு திரைப்படம், ஆந்திராவில் வெளியாகியுள்ளது. இப்படம் ஆந்திராவில் ரிலீசாகி வசூல் வேட்டையில் சாதனை படைத்துள்ளது.
நடிகை சமந்தாவின் ஓ பேபி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இதுவரை இவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போது, இவர் தனது சம்பளத்தை ரூ.3 கோடி சம்பளமாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் திருமணமான பின்பும் இவரது, மார்க்கெட் குறையவில்லை.