பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம்! சுற்றுலா சென்றபோது நடந்த பரிதாபம்!

கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் ராகவேந்திரா, தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவரது மனைவியும். நடிகையுமான ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஸ்பந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜய் ராகவேந்திரா மனைவியின் மரணத்தை அவரது சகோதரர் ஸ்ரீ முரளி திங்களன்று உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், ஸ்பந்தனாவின் உடல் நாளை பெங்களூரு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறது. உடல் வந்த பிறகு, மற்ற சடங்குகள் நடத்தப்படும். மாரடைப்புக்கு முக்கிய காரணம் குறைந்த இரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது.