பிரபல நடிகரின் ரசிகர் தற்கொலை முயற்சி !!!!
நடிகரின் யஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘ கே.ஜி.எஃப் ‘.திரைக்கு வந்த மிக குறுகிய காலகட்டத்தில் இந்த படம் ரூ 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.மேலும் இந்த படம் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகியது.அதிக வசூல் சாதனை படைத்த முதல் கன்னட படம் என்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
நேற்று நடிகர் யஷின் பிறந்தநாள் ஆகும்.அவர் தனது பிறந்த நாளை எப்போதும் தன் ரசிகர்களுடன் கொண்டாடுவாராம். நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானார். இதனால் யஷ் நேற்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடவில்லை.
எனவே அவருடைய ரசிகர் ரவி அவரது வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர். இவரின் செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே நடிகர் யஷ் நேற்று தனது ரசிகரை மருத்துவமனையில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார்.