லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. சமீபத்தில், இந்த திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளதாகவும், லியோ வெளியாகும் முன் தினம் இரவு சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் லியோ படத்திற்கான சிறப்பு காட்சி எனக்கூறி போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது திரையரங்கதிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 19ம் தேதி லியோ படம் வெளியாகவுள்ள நிலையில், 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடுவதாக மதுரையில் உள்ள சினிப் பிரியா திரையரங்கம் பெயரில் போலி டிக்கெட் அசிட்டு ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது.
இந்த போலி டிக்கெட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கிய நிலையில், இது தொடர்பாக சினிப் பிரியா திரையரங்கம் தனது சமூக வலைதளபக்கத்தில் ரசிர்களுக்கு அதெல்லாம் போலி டிக்கெட்கள் என்று கூறி வேண்டுகோள் வைத்துள்ளது.
சினிப் பிரியா வெளியிட்டுள்ள பதிவில், சமீப நாட்களில் போலி டிக்கெட் விற்பனை குறித்து எங்களுக்கு செய்தி வந்தது, அந்த போலி டிக்கெட்டுகளுக்கு எங்கள் சினிப்ரியா நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதால், அந்த போலி டிக்கெட்டுகளை வாங்க வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
லியோ மூன்றாம் பாடல்
இதற்கிடையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான 3-வது பாடலான ‘அன்பெனும்’ என்று தொடங்கும் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி தான்’ மற்றும் ‘படாஸ்’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…