தல அஜித் குறித்து வெளியான போலியான அறிக்கை! விளக்கமளித்த அஜித்!

நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அஜித் அனுப்பியதாக இணையத்தில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், ‘நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.’ என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த அஜித் தரப்பு, இது முகம் தெரியாத ஒரு நபரால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இவரது அறிக்கை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்து தான் வெளியிடப்படும் என்றும், மேலும் அவர் இதுவரை தமிழில் அறிக்கை வெளியிட்டதில்லை என்றும் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025