போலி டாக்டர் பட்ட மோசடி.! தங்களது பாணியில் சி(ற)ரிப்பான பதிலடி கொடுத்த கோபி – சுதாகர்.!

Default Image

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு தனியார் அமைப்பு கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒரு விழா ஒன்றை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. இதில் நடிகர் வடிவேலு, தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கும் யூ-டியூப் பிரபலங்கள் கோபி – சுதாகர் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

gopi sudhakar award
gopi sudhakar award [Image Source : Twitter]

பிறகு  இந்த டாக்டர் பட்டம் போலியானது என்று தெரியவந்தது.  இதனையடுத்து, இந்த போலி டாக்டர் பட்டம் விழாவை நடத்திய ஹரிஷ்  மற்றும் கருப்பையா உள்ளிட்ட சிலரை  தனிப்படை காவல்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூரில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

gopi sudhakar award
gopi sudhakar award [Image Source : Twitter]

இந்த நிலையில், இந்த சம்பவத்தை கலாய்க்கும் வகையில் கோபி சுதாகர் தங்கள் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள்.  அந்த வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது “அவார்ட் பரிதாபங்கள்” என்ற பெயரில் கோபி – சுதாகர் தங்களுடைய பாணியில் கலாய்த்து வீடியோவை வெளியீட்டுள்ளனர்.

நேற்று வெளியான இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவின், ஒரு காட்சியில் கோபி இனிமேல் எந்த விருதுவிழாவிற்கு தங்களை அழைத்தார்கள் என்றாலும் தெளிவாக பின்னணி விவரம் என்ன என்பதை தெரிந்து கொண்டு விசாரித்து விருது விழாவிற்கு செல்லப்போவதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்