போலி மரணம்: பூனம் பாண்டேவுக்கு நோட்டீஸ்.!
நடிகை பூனம் பாண்டேவுக்கு கொல்கத்தாவை சேர்ந்த வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தவிட்டதாக பிப்ரவரி 2 ஆம் தேதி பரபரப்பான செய்தி ஒன்று பரவியது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 3 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் உயிரோடு இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதாவது, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பற்றி பல பெண்களுக்குத் தெரியாது என்றும், பல உயிர்களைப் பலிவாங்கியுள்ள கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே புற்றுநோயால் தான் இறந்ததாக அறிவித்ததாக கூறி இறப்பு செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆஹா! வெற்றிமாறனிடம் கதைக்கேட்ட விஜய்? தளபதி 69 அப்டேட்!
இதற்கு பல தரப்பினர் கண்டனம் எழுப்பினர். அவரை கைது செய்யவும் வலியுறுத்தினார். இந்நிலையில், நடிகை பூனம் பாண்டேவுக்கு கொல்கத்தாவை சேர்ந்த வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், “அவர் மக்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியுள்ளார். இதற்காக உடனே மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவதூறு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடுப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.