வடிவேலு ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய பட அப்டேட்!

வடிவேலு -பஹத்பாசில் இருவரும் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவருடைய கம்போவும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கிறார்கள். மலையாள இயக்குனர் சுதீஷ் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்னதாக வில்லாலி வீரன், ஆறுமனமே, அனுமன் கியர் உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து தமிழில் பஹத் பாசில் – வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
அயோத்தி ராமர் கோயில் விழா! மலையாள திரையுலகினரின் அதிர வைக்கும் செயல்.!
இந்த திரைப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இருப்பினும் படத்திற்கு தலைப்பு என்னவென்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று இந்த படத்திற்கு தலைப்பு என்னவென்பது குறித்து போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘மாரீசன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட்டரை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்டு உருவாகும் படம் போல தெரிகிறது. வேட்டை மற்றும் வேட்டையாடுபவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025