ஒன் மேன் ஷோ! வசூலில் அதிரடி கிளப்பும் ஆவேசம்!

aavesham box office

Aavesham : பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை கடந்துள்ளது.

மலையாள சினிமாவில் இருந்து சமீப காலமாக வெளியான படங்கள் எல்லாம் சூப்பரான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே, மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம், உள்ளிட்ட படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது. அந்த படங்களை தொடர்ந்து பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படமும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வசூலை குவித்து வருகிறது.

இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பஹத் பாசில் உடன் இணைந்து சஜின் கோபு, ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய் சங்கர், மிதுன் ஜெய் சங்கர், சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பல பிரபலன்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பஹத் பாசில் நடிப்பு மற்றும் நடனத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.

மலையாளத்தையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் பலரும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு மிரட்டலான நடிப்பை நடிகர் பஹத் பாசில் இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே, படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில், படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியான இந்த ஆவேசம் திரைப்படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் 50 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக இன்னுமே படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த திரைப்படமும் 100 கோடி வசூல் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident