வயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் வழங்கிய பகத் பாசில் – நஸ்ரியா தம்பதி.!

கேரளா : கேரளாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 288 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழ் சினிமாவில் நேற்று முதல் ஆளாக விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
இதனை தொடர்ந்து, இன்றைய தினம் சிவக்குமார் குடும்பமான சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில், மலையாள மெகாஸ்டார் மம்முட்டி மற்றும் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மானும் இணைந்து 35 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
மம்முட்டி ரூ.20 லட்சமும், துல்கர் ரூ.15 லட்சமும் நன்கொடையாக வழங்கியுள்ளார். பல பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன் வரிசையாக வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக, கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தற்பொழுது நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை நஸ்ரியா ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025