மலையாள சினிமாவில் பிரபல ஜோடிகளான பகத் பாசில் மற்றும் நஸ்ரியா, தங்களின் 9வது திருமண நாளை கொண்டாடும் விதமாக, கேரளாவில் முதன் முறையாக இந்த தம்பதியினர் புத்தம் புதிய “லேண்ட் ரோவர் டிஃபென்டர்” என்ற சொகுசு காரை வாங்கியுள்ளனர். இதன் மூலம் கேரளாவின் முதல் ‘லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90’ சொகுசு காரை வாங்கிய நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த வாகனத்தின் ஆன்ரோடு விலை ரூ.2.70 கோடி ஆகும். இந்த கனவு காரை வாங்குவதற்காக பகத் பாசில் ரூ.46 லட்சம் வரி செலுத்தியுள்ளராம். இந்த வாகனம் கொச்சியில் உள்ள முத்தூட் ஜேஎல்ஆர் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டது. இந்த காரில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாராகியுள்ள டிஃபென்டரில் ஆறு ஏர்பேக்குகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என பல தரம்வாய்ந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
திருமண கொண்டாட்டம்:
ஆகஸ்ட் 21ம் தேதி தனது திருமணநாளை மனைவி நஸ்ரியா உடன் கொண்டாடினார் பகத் பாசில். அன்றைக்கு தான் நடிகர் சாந்தனு-கீர்த்தி திருமணநாள் என்பதால், 2 ஜோடிகளும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஆகஸ்ட் 21, 2014-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்து பல வருடங்கள் கழித்து, டிரான்ஸ் உப்பட ஆறு திரைப்படங்களில் படங்களில் ஒன்றாக நடித்தனர்.
பகத் கையில் பல சொகுசு கார்கள்:
தற்போது, ரூ.2.70 கோடி கொடுத்து வாங்கிய ‘லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90’ காரை தவிர பகத் – நஸ்ரியாவின் வீட்டில் BMW 740i, Porsche, Mini Countryman, Lamborghini Urus மற்றும் Range Rover என வரிசை கட்டி நிற்கிறது, இது அனைத்துமே கோடிகளில் அடங்கும். இதனை வைத்து பார்க்கையில், இவர்கள் இருவரும் கார் பிரியர்கள் என்று தெளிவாக தெரிகிறது.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…