கொரோனாவை எதிர்கொள்! கவிஞர் வைரமுத்துவின் கவிதை!
கவிஞர் வைரமுத்து சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனோ என்ற கொடுமையான வைரஸ் நோய் சீன மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நோய் தற்போது பல நாடுகளில் பரவியுள்ளது.
இதிலிருந்து தப்பிக்க பலரும் பல அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
உணவை மருந்தாக்கு
உடம்பை இரும்பாக்கு
மூச்சுப் பைகளில்
நம்பிக்கை நிரப்பு
நோய்த் தடுப்பாற்றல்
பெருக்குதல் சிறப்பு
கோவிட் – 19
கொல்லுயிரியை
எழுந்து எதிர்கொள்
இந்திய நாடே!
என பதிவிட்டுள்ளார்.
உணவை மருந்தாக்கு
உடம்பை இரும்பாக்குமூச்சுப் பைகளில்
நம்பிக்கை நிரப்பு
நோய்த் தடுப்பாற்றல்
பெருக்குதல் சிறப்புகோவிட் – 19
கொல்லுயிரியை
எழுந்து எதிர்கொள்
இந்திய நாடே!#coronavirusindia #CoronaVirusUpdate— வைரமுத்து (@vairamuthu) March 4, 2020
வில், ‘