பரபரப்பு.! அந்தரங்க வீடியோ..நடிகர் கிச்சா சுதீப்பிறகு வந்த மிரட்டல்.!
கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அரசியல் கட்சியான பாஜகவில் இணைவார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் மத்தியில், அவரது மேலாளருக்கு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிச்சா சுதீப்பின் மேலாளர் ஜாக் மஞ்சுவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து வந்த கடிதத்தில், “கிச்சா சுதீப்பின் தனிப்பட்ட வீடியோவை” சமூக ஊடகங்களில் வெளியீட்டுவிடுவோம்” என மிரட்டல் வந்துள்ளது.
இந்த மிரட்டலை தொடர்ந்து மேலாளர் அளித்த புகாரின் பேரில், புட்டனஹள்ளி போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 504, 506 மற்றும் 120 (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும். இதற்கிடையில், மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கன்னட சூப்பர் ஸ்டார் புதன்கிழமை பாஜகவில் சேருவார் என்று ஊகங்கள் செய்திகள் பரவி வருகின்றன. கர்நாடக சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 13-ம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.