“எல்லாரும் என்னை கஷ்ட படுத்துறாங்க”…கதறி அழுத தர்ஷா குப்தா!

ஆண்கள் அணியினர் தன்னை அசிங்கப்படுத்துவதாக கூறி தர்ஷா குப்தா கதறி அழும் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

Bigg Boss Tamil Season 8

சென்னை : அழுகை, காமெடி, சண்டை என இவையெல்லாம் இருந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும் என்றே கூறலாம். இதுவரை நடந்து முடிந்த அணைத்து சீசன்களிலும் இது நடக்காமலிருந்தது இல்லை. வழக்கமாக இதுவரை நடந்த சீசனங்களில் இதெல்லாம் சில வாரங்களுக்குப் பிறகு தான் நடந்தது. ஆனால், இந்த முறை விரைவாகவே சண்டை மற்றும் அழுகை தொடங்கியுள்ளது.

அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் பலருடைய சண்டைகள் சத்தம் கேட்டாலும், தர்ஷா குப்தாவின் அழுகை குரல் தான் அதிகமாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆவதற்குள் சுனிதா உடனான பிரச்சினைக்கு தர்ஷா குப்தா கண்கலங்கி இருந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது ஆண்கள் அணியில் இருப்பவர்கள் தன்னை கஷ்ட படுத்துகிறார்கள் எனக் குமுறியுள்ளார். தர்ஷா குப்தா தற்போது ஆண்கள் அணியில் ஒருவராக இருக்கிறார். எனவே, இன்றைய தினத்தில் அவர் சமைத்து முடித்த நிலையில் , சமையல் முழுவதுமாக முடிவதற்குள் எடுத்துச் சாப்பிட்டு விட்டு சாப்பாடு சரியாக இல்லை வாந்தி வருகிறது என்பது போலக் குற்றம் சாட்டி பேசியுள்ளனர்.

இதனால் வேதனையடைந்த தர்ஷா குப்தா சக போட்டியாளர்களிடம் நின்று அழுது கொண்டு தன்னை ஆண்கள் அணியினர் மோசமாக வேதனைப்பட வைப்பதாகக் கதறி அழுது பேசினார். பிறகு, முத்துக்குமரன் இது விளையாட்டுக்காக அப்படிச் செய்கிறார்கள் இதற்கு வருத்தப்படாதீர்கள் மா என்பது போல ஆறுதல் கூறினார்.

அதற்கு தர்ஷா குப்தா ” விளையாட்டுக்கு என்றாலும் நான் இவ்வளவு நாள் இந்த நிகழ்ச்சியிலிருந்திருக்கிறேன். இதற்கு முன்பு சில நிகழ்ச்சியிலிருந்திருக்கிறேன். எனவே, இப்படி என்னை இந்த நிகழ்ச்சியில் சொல்லும்போது வெளியே இருந்து என்னைப் பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்? எனக் கேட்கிறார். அத்துடன் ப்ரோமோ முடிகிறது. ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கவலை படாதீர்கள் என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt
NZ vs BAN