Shriya Saran : வயசு போச்சு கவர்ச்சி போகவே இல்லை! ஸ்ரேயாவின் ஹாட் கிளிக்ஸ்!
நடிகை ஸ்ரேயா சரணுக்கு இப்போது வேண்டுமானால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு காலத்தில் எல்லாம் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், என பல டாப் நடிகர்களுடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்தார். பிறகு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் ஹிந்தி திரையுலகிற்கு சென்றுவிட்டார். அங்கும் பெரிய அளவில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூட கூறலாம்.
குறிப்பாக இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `ஆர்ஆர்ஆர்’ மற்றும் `திரிஷம் 2′ படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் படத்தில் இவருடைய காட்சிகள் எல்லாம் சிறிது நேரங்கள் மட்டும் தான் வந்திருக்கும். இந்த படங்களை தொடர்ந்து இவருக்கு கடைசியாக வெளியான கப்சா திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை.
இந்நிலையில், 40 வயதாகும் ஸ்ரேயா இன்னும் வயதான தோற்றம் இல்லாமல் நடிக்க வந்த ஆரம்பத்தில் எவ்வளவு அழகாக இருந்தாரோ அதே அளவிற்கு கவர்ச்சியுடன் அழகுடன் இருக்கிறார். ரசிகர்களுக்காகவே வித்தியாசமாக உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் மஞ்சள் நிற ஸ்டைலான சேலை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் ஆத்தாடி 40 வயதில் இவ்வளவு அழகா? என ஆச்சரியத்துடன் கூறி வருகிறார்கள்.