Kanguva / @kollycorner
கங்குவா : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தினை பார்க்க இந்திய சினிமாவே ஆவலுடன் காத்துள்ளது. படத்தினை இரண்டு பாகங்களாக தயாரிப்பு நிறுவனம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கங்குவா படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. இருப்பினும், வேட்டையன் பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தாலும் கூட இரண்டு படமும் ஒரே தினத்தில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கங்குவா படத்துடன் வேறு படம் போட்டிக்கு வருகிறதா? என்பது பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கங்குவா படத்துடன் வேறு எந்த படம் வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சில படங்கள் வரலாம் என்று நான் நினைக்கிறேன்.
நம்மளுடைய கையில் இந்த விஷயத்தில் எதுவும் இல்லை எல்லாமே அந்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது. ஆனால், நிச்சியமாக கங்குவா படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் போது எந்த படமும் போட்டிக்கு வராது என்பதை உறுதியாக சொல்வேன்” என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் கங்குவா படத்தின் முதல் பாகத்தில் சூர்யாவுடன் பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, திஷா பதானி, யோகி பாபு, ரவி ராகவேந்திரா, நடராஜன் சுப்ரமணியம், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…