கமல்ஹாசன் கூட ஒரு படம் தான் எடுக்க முடியும்.! நழுவிய இயக்குனர்கள்..?
கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம் என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம், விஸ்வரூபம் 1 , விஸ்வரூபம் 2, விருமாண்டி, உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தாலும் கூட, அவர் நடித்த பல படங்களிலும் படத்தை இயக்கிய இயக்குனர்களின் ஈடுபாடுகளுடன் அவருடைய ஈடுபாடும் இருக்கும். இதனை அவருடைய படங்களை பார்க்கும்போதே நமக்கு தெரியும்.
ஏனென்றால், கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் இந்த காட்சியை இயக்குனர் எப்படி எடுக்க போகிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும். இதனால் பல சமயம் இயக்குனர் விருப்பத்தின் பெயரில் தனது ஈடுபாடுகளையும் உட்புகுத்துவார். இந்த விஷயத்தில் சில இயக்குனர்களுடன் கமல்ஹாசனுக்கு முரண் பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இயக்குனர்களிடம் கமல்ஹாசன் பணிபுரிந்தார் என்றால் அடுத்ததாக அவர்களுடன் மற்றோரு படத்தில் கமல்ஹாசன் ஒரு சில இயக்குனர்கள் தவிர்த்து பெரும்பாலும் மீண்டும் பணியாற்றி இருக்கமாட்டார்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கெளதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம், ஷங்கர், சுந்தர் சி, சுரேஷ் கிருஷ்ணா, பரதன், சரண், ஆகிய இயக்குனர்கள் எல்லாம் கமல்ஹாசனை வைத்து பெரிய ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்கள். பொதுவாகவே ஹிட் படங்களை இயக்குனர்கள் கொடுத்தார்கள் என்றாலே அந்த ஹீரோக்கள் அவர்களுடன் அடுத்த படங்களில் பணிபுரிய ஆசைப்படுவார்கள்.
ஆனால்,மேற்க்கண்ட ஹிட் இயக்குனர்கள் நீண்ட வருடங்களாக கமல்ஹாசன் உடன் படங்கள் இயக்காமல் இருந்து வந்துள்ளனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இயக்குனர்கள் தங்களுடைய மனதில் ஒரு காட்சியை இப்படி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்படுவது உண்டு. அந்த நேரத்தில் கமல்ஹாசன் தலையீடு இருக்கலாம் என்ற ஐயத்தால் கூட மீண்டும் இவர்கள் கமல்ஹாசன் படத்தை இயக்காமல் இருந்துள்ளனர் என கூறலாம்.
இதில், ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் கூட நீண்ட வருடங்களுக்கு பிறகு தான் கமல்ஹாசனுடன் இணைந்து இருக்கிறார்கள். அந்த வகையில், ஷங்கர் இந்தியன் 2 விழும், மணிரத்னம் தக் லைஃப் படத்தின் மூலமும் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார்கள்.