“ஜெயம் ரவியுடன் காதல் இல்லை..இனி நடந்தால் நீங்க தான் காரணம்” – கெனிஷா பரபரப்பு!
ஜெயம் ரவியுடன் இதுவரை காதல் ஏற்படவில்லை இனிமேல் அப்படி நடந்தால் அதற்கு முழு காரணம் மீடியாக்கள் தான் என தனியார் ஊடகத்திற்கு கெனிஷா பேட்டியளித்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், விவாகரத்து பற்றிய அறிவிப்பை ஜெயம் ரவி வெளியீட்டு இருந்தாலும் தன்னிடம் இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார்.
இதன் காரணமாகத் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம்? ஆர்த்தி எதற்காக இப்படியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தது. இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், மேலும் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலப் பாடகி கெனிஷாவுக்கும், ஜெயம் ரவிக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியானது.
இதன் காரணமாகத் தான் ஜெயம் ரவிக்கு அவருடைய மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் விவாகரத்து முடிவு ஜெயம் ரவி எடுத்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவி இது குறித்து பேசி அவருடன் தொடர்பு இல்லை என பேசி விளக்கம் அளித்தும் இருந்தார்.
read more- பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!
ஜெயம் ரவி அப்படிக் கூறி, விளக்கம் அளித்தபோதிலும் இன்னுமே அவருக்கும் கெனிஷாவுக்கு இடையே தொடர்பு இருப்பதாகப் பரவும் தகவல் நின்றபாடு இல்லை. இந்த நிலையில், இது குறித்து முதல் முறையாகப் பாடகி கெனிஷா மனம் திறந்து பேசி விளக்கம் கொடுத்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த அவர் பேசியதாவது ” மனதளவில் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஹீலிங் செய்துவருகிறேன். அப்படி தான், ஜெயம் ரவி கோவாவுக்கு வரும் போது அவருடைய மனைவி மற்றும் ஆர்த்தி குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. எனவே, அவரை என்னுடைய க்ளையன்ட்டாக சேர்த்துக்கொண்டேன்.
சென்னையிலிருந்தால் பலருக்கும் தெரிந்துவிடும் என்பதால் தான் அவர் கோவா வரைக்கு அவ்வளவு தூரம் வந்தார். மற்றபடிப் பரவும் தவறான தகவலைப் போல் எந்த விஷயமும் இல்லை. எனக்கும் அவருக்கு இதுவரை காதல் ஏற்படவில்லை. அப்படி இனிமேல் ஏற்பட்டது என்றால் அதற்கு முழுமையான காரணம் ஊடகங்கள் மட்டும் தான் காரணம்.
ஆர்த்தி தன் மீதான தவறுகளை மறைக்க என்னைப் பலியாடு ஆக்க நினைக்கிறார்கள். இனிமேல் என்னைப் பற்றி இப்படி தவறான விஷயங்கள் வெளியே வந்தால் கண்டிப்பாக நான் சட்டப்படி மான நஷ்ட வழக்குத் தொடரவும் தயாராக இருக்கிறேன்” எனவும் ஆதங்கத்தோடு பாடகி கெனிஷா பேசியுள்ளார்.