leo vijay rajini [File Image]
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்து வருகிறது. இருந்தாலும் கூட லியோ படம் 2.0 வசூல் சாதனையை முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், 2.0 திரைப்படம் தான் தமிழ் படங்களில் இந்தியாவில் மட்டும் அதிகம் வசூல் செய்த படம் என்கிற சாதனையை வைத்துள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அப்போவே ரூ.700 கோடி முதல் 800 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இந்த சாதனையை எந்த தமிழ் திரைப்படமும் முறியடிக்க முடியவில்லை.
இந்நிலையில், லியோ திரைப்படம் 7 நாட்களில் உலக முழுவதும் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. லியோ, 2.0 திரைப்படத்தின் முதல் நாள் வசூலை முந்திருந்தாலும், ஒரு வாரம் வசூலால் ராஜியின் 2.0 திரைப்படத்தின் வசூலை முறியடிக்க முடியவில்லை.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான 2.0 திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.500 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்திய வசூலில் என்னதான் வசூலில் பல சாதனைகளை லியோ முறியடித்தாலும், 2.0 திரைப்படத்தின் வசூலை முந்தவில்லை. லியோ ரூ.461 கோடி தான் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் 2.0 திரைப்படத்தின் மொத்த வசூலை தாண்டுவது கஷ்டம் தான்.
கலவையான விமர்சனங்களால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. ஆனால், லியோ திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் மற்றும் ஒரு வாரம் வசூலில் ஜெயிலர் படத்தை லியோ முந்தியுள்ளது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…