100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்…அந்த நடிகர் மீது கடும் கோபத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன்.!

Default Image

ஆக்சன் கிங் அர்ஜுன் தற்போது பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்வாக் சென்-னை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Arjun Sarja
Arjun Sarja [Image Source: Twitter]

இந்த படத்தில் நடிக்க விஷ்வாக் சென் சம்பளம் அதிகமாக கேட்டுள்ளாராம். அதனை அர்ஜுனும் தர சம்மதித்துவிட்டு படத்திற்கான கதையை அவரிடம் கூறினாராம். பிறகு அவரும் சம்மதம் தெரிவித்தாராம், ஆனால். படப்பிடிப்பிற்கு விஷ்வாக் சென் வரவே இல்லையாம். இதனை அர்ஜுன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- நான் இன்னும் பெரிய ஹீரோக்கள் கூட படம் நடிக்கல..வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

Arjun Sarja And Vishwak Sen
Arjun Sarja And Vishwak Sen [Image Source: Twitter]

இது குறித்து பேசிய அவர் ” நான் ஒரு புதிய படத்தின் கதையை விஷ்வக் சென்னிடம் கூறினேன். படத்தில் நடிக்க அவர் என்ன சம்பளம் கேட்டாரோ அதை நாங்கள் கொடுக்கிறோம் என்றும் சொன்னோம்.  கேரளாவில் ஆரம்பமான படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவருடன் பெரிய சீனியர் நடிகர்களான ஜெகபதி பாபுவுக்கும் அவருக்கும் இடையில் எடுக்கப்படவிருந்த காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டிருந்தோம்.

Arjun Sarja And Vishwak Sen
Arjun Sarja And Vishwak Sen [Image Source: Twitter]

இதுவரை என்னுடைய வாழ்க்கையில் யாருக்கும் இவ்வளவு தொலைபேசி அழைப்புகளை நான் செய்ததில்லை. அவருக்கு அவ்வளவு அழைப்பு கொடுத்தேன். தெலுங்கில் இருக்கும் டாப் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் ஆகியோர்  தொழில் ரீதியாக அக்கறையாகவும் வேலை செய்கிறார்கள். ஒரு நடிகர் அவர் சார்ந்த கலை மீது ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை வைத்து இந்தப் படத்தைத் தொடர விருப்பமில்லை. 100 கோடி வந்தாலும் இனி அவருடன் பணிபுரிய மாட்டேன்” என்று கோபத்துடன் பேசியுள்ளார் அர்ஜுன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly