கவுண்டமணி பண்ண வேல….அஜித் கூட அந்த அனுபவம் மறக்க முடியாது – ஷகீலா ஓபன் டாக்.!

natchathira bangla ajth

Shakeela: நடிகை ஷகீலா அஜித்துடன் நடனம் ஆடிய தருணத்தை சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார்.

இயக்குனர் கே. சுபாசின் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த ‘நேசம்’ படத்தில் கதாநாயகனாக அஜித்தும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

மேலும் படத்தில் கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படமாகும்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நட்சத்திர பங்களா’ என்ற பாடல் செம ஹிட் ஆனது. இந்த பாடல் ஒரு ஐட்டம் பாடலாகும், இந்த பாடலில் ஷகிலா மாற்றம் ஜோதி மீனா ஆகியோர் நடனம் ஆடி இருப்பார்கள்.

இந்த பாடலில் நடந்த ஒரு சம்பவத்தை ஷகீலா சமீபத்திய ஊடக ஒன்றில் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ‘இந்த பாடலுக்கு முன்னதாக கவுண்டமணி பேரிச்சம் பழம் கொடுத்தாரு, அதை நாணும் ஜோதி மீனாவும் சாப்பிட்டோம்.

அதை சாப்பிட்டுவிட்டு நானும் மீனாவும், பாடலில் ஒரு ஸ்டேப் சுத்துவது போல் உண்டு. அதனை செய்ததும் யார் யார் அருகில் ஆடுகிறார் என்பது கூட தெரியல தலை கிறுகிறுவென சுத்திவிட்டது.

ஏன்னு கவுண்டமணியிடம் கேட்க, அந்த பேரிச்சம் பழம் வைனில் ஊறவைத்த பழமாம். இது பற்றி அவர் முனதாகவே சொல்லவே இல்ல, அது தெரியாமல் நாங்கள் அதை சாப்பிட்டுட்டு ஆடியாச்சி என்று சொன்னதுடன் அஜித்துடன் அந்த தருணத்தை மறக்கவே முடியாது’ என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan