சூர்யாவுக்காக ஒன்று திரண்ட ஜிவி-அனிருத்-விக்னேஷ் சிவன்.! ET தெறிக்கும் அப்டேட்.!
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து முதல் பாடல் நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். வினய் வில்லனாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ரிலீஸ் பொங்கல் என கூறப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 4 என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.
இமான் இசையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்து பாடியுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியானது. பக்கா குத்து பாடலாக வெளியாக உள்ளது என ப்ரோமோவில் வந்த இசையும், சூர்யாவின் குத்தாட்டமும் கூறுகிறது. நாளை சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
#ETFirstSingle is ready to hit you Tomorrow at 6pm!
An @immancomposer musical | Sung by @gvprakash & @anirudhofficial | Lyrics: @VigneshShivN@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @RathnaveluDop @priyankaamohan @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #EtharkkumThunindhavan pic.twitter.com/ut0ye7zrf4— Sun Pictures (@sunpictures) December 14, 2021