இது பொள்ளாச்சி பிரச்சனை இல்லை.! திட்டவட்டமாக மறுத்த இயக்குனர்.!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தியது என கூறப்பட்டிருந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தயாரித்துள்ளது இப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் மார்ச் மாதம் 10ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் டீஸர், டிரெய்லர் என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதைகளமானது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தி இருக்கும் என முதலில் கூறப்பட்டு வந்தது. இதுபற்றி இயக்குனர் பாண்டிராஜிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது அவர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த திரைப்படம் பொள்ளாச்சி சம்பவத்தை மட்டுமே வைத்து எடுக்கப் பட்டது கிடையாது. இப்படம் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை உணர்த்தும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் வகையிலும், இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த பாலியல் கொடுமைகள் பற்றியும் இப்படம் பேசும். அதனால், பொள்ளாச்சி சம்பவத்தை மட்டும் வைத்து எதிர்பார்த்து படத்திற்கு வரவேண்டாம் இப்படம் பெண் குழந்தைகளைக் கொண்ட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக இருக்கும் என குறிப்பிட்டார்.