என்னை நோக்கி பாயும் தோட்டா..! தணிக்கை முடிந்து வந்த சான்றிதழ் என்ன பாருங்க..!
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் 3 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.ஆனால் பாதி படம் முடிந்த நிலையில் படம் கிடப்பில் போடப்பட்டது இப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் பல படங்கள் வெளிவந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக ரிலீஸுக்கு படம் தயாரானது.
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தணிக்கை குழுவிற்கு செல்வதாக தகவல்கள் வந்த நிலையில் இதனை படக்குழுவும் உறுதிப்படுத்தி வந்த நிலையில் படம் இப்போது தணிக்கை எல்லாம் முடிந்து UA சான்றிதழை பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.