கடந்த வருடம் வெளியாகிய “எஞ்சாயி எஞ்சாமி” பாடல் பலத்த வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகர் அறிவு, பாடகி தீ குரலில் வெளியாகியது. இந்த பாடலை அறிவு தான் எழுதியிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்த பாடலை பாடகி தீ, கிடாக்குழி மாரியம்மாள் பாடி அசத்தியிருந்தார்கள். ஆனால், அந்த நிகழ்வில் பாடகர் அறிவு பங்கேற்கவில்லை. இதுகுறித்து பலரும் அறிவு புறக்கணிப்படுகிறாரா..? எதற்கு அவர் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்கள்.
இதையடுத்து, அறிவு தான் புறக்கணிக்கபடுவது குறித்து இன்ஸ்டாவில் “எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு நான் இசையமைத்தேன்..எழுதினேன்.. பாடினேன்.. நடித்தேன். எனக்கு யாரும் ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ எழுதி கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், இந்த பாடலுக்காக மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் இந்த பாடலுக்காக கழித்தேன் என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அண்மையில் ஒரு பேட்டியில் அறிவு மற்றும் கலைஞர்களுக்கு பக்கபலமாக நான் எப்போதும் நின்றிருக்கிறேன். நான் எப்போதும் அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை உணர்ந்திருக்கிறேன். “எஞ்சாய் எஞ்சாமி” பாடல் குழுவின் கூட்டு முயற்சி” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பாடகி தீயும் விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், ” அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் நான் தெரிந்துகொண்டேன்.
இதையும் படியுங்களேன்- ஒரே வருடத்தில் 3 படங்கள்.! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்.?
அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினார்கள். ஆனால், அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாமல் போனது. எஞ்சாயி எஞ்சாமி பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மஜ்ஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…