தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

ED Raid - Ravinder Chandrasekar

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்‌ஷன் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலையில் வந்த அமலாக்கத்துறை , நீண்ட நேரமாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அவர் மீது, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் எழுந்ததை தொடர்ந்து, அதிகாரிகள்தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆம், இவர் ரூ.16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 2023 செப்டம்பர் 8 ஆம் தேதி சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என பாலாஜி என்ற தொழிலதிபரிடம் ரூ.16 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMK VS BJP LIVE
Pradeep Ranganathan
SAvAFG - 1st Innings
shankar ed
MNM leader Kamalhaasan
BJP State presisident Annamalai - GetOutStalin
Covid HKU5