அந்த ஊர் சினிமாவில் நான் நானாக இருக்க முடியவில்லை.! பிரியங்கா சோப்ரா மன வேதனை.!
நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய ஒரு பேட்டியில் பாலிவுட்டில் இருக்கும் ஒவ்வொரு கணமும் கயிற்றில் நடப்பதை போல் உணர்ந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் யாரையும் முழுவதுமாக நம்பவில்லை.
என்னுடைய முதல் 2 வருடங்கள் எந்த அளவிற்கு மோசமாக இருக்கமுடியுமா அந்த அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. அப்போது நான் இருந்த மனநிலையில், எந்த படம் நல்ல படம்? எந்த படம் கெட்ட படம் என்று ஒரு சரியான தெளிவில்லாமல் இருந்தேன். படங்கள் இல்லாத சமயத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று மிகவும் கவலையுடன் யோசித்துக் கொண்டிருப்பேன்.
1 வருடத்திற்கு மேலாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பில்லாமல் இருந்தபோது பலமுறை வாய்ப்பு கிடைக்காமல் பல படங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளேன். பிறகு மீண்டும் கல்லூரிக்குச் படிக்க செல்ல ஆரம்பித்தேன். அப்போது தான் “andaaz” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்தேன்.
இதையும் படியுங்களேன்- தமிழ் சினிமாவில் பிரமாண்ட சாதனை…. “விக்ரம்” வசூலை முந்திய “பொன்னியின் செல்வன்”.!
நான் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது என்னை நிராகரித்தவர்கள் இப்போது என்னுடன் பணியாற்றுகிறார்கள். அவர்களைப் பற்றித் நான் தவறாக ஒருபோதும் நினைத்ததேயில்லை. அவர்களின் வேலையை அவர்கள் செய்தார்கள் இதில் ஒன்னும் எனக்கு மனவருத்தம் இல்லை. இதுதான் இந்தத் தொழில். உயர்ந்த எண்ணங்கள் நம்மை உயர்த்தும்.
நம்மைச் சுற்றி பல புத்திசாலிகள் இந்தத் திரைத்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் போலியானவர்கள். அவர்களை நாம் தான் சமாளிக்கவேண்டும். உண்மையில் இங்கு நான் நானாக இருக்க முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்” என வருத்தத்துடன் பேசியுள்ளார் பிரியங்கா சோப்ரா.