மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தேசிய ஒருமைப்பாடு நிலைக்கும் : கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவரது பாடல்கள் பல சாதனைகளை படைத்து, பல விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, தஞ்சையில் நடைபெற்ற தமிலாற்றுப்படை நூலின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், பேராசிரியர் ஞான சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கும், சிந்திக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை அந்தந்த மாநில மொழிகளுக்கு கொடுத்தால் தேசிய ஒருமைப்பாடு நிலைக்கும் என்று கூறியுள்ளார்.