பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளியாகிறது ‘எமர்ஜென்சி’! எப்போது தெரியுமா?

பல சர்ச்சைகளுக்குப் பிறகு, கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி அதன் வெளியீட்டு தேதி இறுதியாக வெளியாகியுள்ளது.

kangana in emergency

டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் “எமர்ஜென்சி”படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கங்கனாவின் மணிகர்னிகா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் முதலில் ஜூன் 14, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், அப்பொழுது கங்கனாவின் அரசியல் பிரச்சாரம் காரணமாக, அவர்  ரிலீஸ் தேதியை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

பின்னர், படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆகஸ்ட் 14 அன்று வெளியானது, அதன் பிறகு படம் குறித்து சர்ச்சை பெரியதாக மாறியது. பஞ்சாபில் இப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதன் காரணமாக, அதன் வெளியீட்டு தேதி செப்டம்பர் 6 என நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இந்தப் படத்திற்கு சீக்கிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்த பின்னரும், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

சீக்கியர்கள் இப்படம் தங்களின் சமூகத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை விவரிப்பதாக குற்றம் சாட்டினர். இவ்வாறு பல மாத தாமதத்திற்குப் பிறகு, படத்தின் மீது எழுப்பப்பட்ட பல சர்ச்சைகளால் ரிலீஸ் பலமுறை தள்ளி போனது.

இப்படி, நீண்ட நாட்களாக சர்ச்சையில் சிக்கிய இப்படம் சென்சார் போர்டில் சிக்கியது.  இறுதியாக அக்டோபர் 17 அன்று மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் (CBFC) படத்திற்கு அனுமதி கிடைத்தது.

அதன் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நிம்மதியைக் கொடுத்தது. இந்த நிலையில், படம் தணிக்கை குழுவிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதாகவும், இப்போது படம் அடுத்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

இந்தப் படத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக கங்கனா நடித்திருக்கிறார். கங்கனா இப்படத்தில் நடிப்பது மட்டுமின்றி படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். மேலும் இந்த படத்தில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர் மற்றும் மறைந்த சதீஷ் கௌஷிக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்