Categories: சினிமா

திரைப்படமாக உருவாகிறது எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு! முழு விவரம்…

Published by
கெளதம்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமான ஒன்றாக தற்போது மாறிவிட்டது. குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ஜான்பாவான்களை வைத்து படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில், விஞ்ஞானிகளை வைத்தும் படமாக்க தொடங்கி விட்டனர்.

முன்னதாக, விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளரான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நடிகர் மாதவன் அவரது பெயரில் படமாக்கினார். இந்த படத்தை அவரே இயக்கி, அவரது கதாபாத்திரத்தில் கட்சிதமாக நடித்திருந்தார்.

இந்த வரிசையில், தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் என்பவர் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டிருந்தார்.

அதனை மையமாக வைத்து, பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனரான, ஏ 24 என்ற நிறுவனம் தயாரிக்க,  இயக்குனர் டேரன் அரோனோஃப்ஸ்கி இப்படத்தை இயக்க உள்ளார். இருப்பினும், லான் மஸ்க்கை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் செய்த பெரும்பாலானவை சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் மூலம் மக்களின் பார்வைக்கு வந்துவிடுகிறது.

சம்பவத்திற்கு தயாராகும் விடுதலை-2.! ஷங்கரை ஃபாலோ செய்யும் வெற்றிமாறன்.!

இருந்தாலும், எலான் மஸ்க்கின் வாழ்க்கை பயணத்தை ஆராயும் ஒரு திரைப்படம் உருவாக  உருவாக இருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதற்கிடையில், எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் முந்தைய படைப்பான, “ஸ்டீவ் ஜாப்ஸ்” 2015-ல் வெற்றிகரமான திரைப்படமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல், மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

1 hour ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

2 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

3 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

4 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

5 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

5 hours ago