கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்ககத்தில் வெளியான அவதார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை. செய்தது 3 ஆஸ்கர் விருதுகளை இந்த படம் அள்ளியது.
முதல் பாகத்திற்கு அமோகமாக வெற்றி கிடைத்த தால் கடந்த- 2016 ஆம் ஆண்டு “அவதார் 2” படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அந்த அறிவிப்பிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்துடன் இரண்டாம் பாகம் தான் வெளியாகும் என காத்திருந்தார்கள்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அவதார் 2 படம் இந்த வருடம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என கடத்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு “தி வே ஆப் வாட்டர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பண்டோரா உலகின் தண்ணீர் தேசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அவதார் 2 டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லரில் பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அசத்தும் அற்புத காட்சிகள் நிறைந்து, தண்ணீர் தேசத்தில் நடக்கும் பிரச்சனைகள் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளன. டிரெய்லர் மிகவும் அற்புதமாக இருப்பதால் இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…