இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கிழக்கே போகும் ரயில்” இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுதாகர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மனிதரில் இத்தனை நிறங்களா, கரை கடந்த ஒருத்தி, சுவர் இல்லாத சித்திரங்கள், ஆயிரம் வாசல் இதயம், சின்ன சின்ன வீடு கட்டி, எதிர் வீட்டு ஜன்னல் உள்ளிட்ட தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்தார்.
அந்த சமயம் இவர் அணிந்திருந்த பேண்ட் மற்றும் சட்டை மிகவும் பிரபலமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு மிகவும் ட்ரெண்டிங் ஆன நடிகராக இருந்தார். இவருடைய மார்க்கெட் முழுவதுமாக போனதற்கு காரணமும் இவர் தானாம். இவர் பல வெற்றி படங்களில் நடிக்க முக்கிய வேராக இருந்தவர் பாரதிராஜா தான். ஏனென்றால், பாரதிராஜா சுதாகரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலத்திலேயே சுதாகர் காதல் கிசுகிசுவில் சிக்கினாராம். குறிப்பாக ராதிகாவை தீவிரமாக காதலித்து வந்தாராம். அதைப்போல நடிகை ஜெயசந்திராவை வலுக்கட்டாயமாக காதலித்தாராம் ஜெயச்சந்திரா எங்கு சென்றாலும் அவர் பின்னே பூவே கொண்டு சென்று நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று வலுக்கட்டாயமாக கூறுவாராம்.
அதைப்போல நடிகை ஜெயசித்ராவை வலுக்கட்டாயமாக காதலித்தாராம். ஜெயசித்ரா எங்கு சென்றாலும் அவர் பின்னே பூவே கொண்டு சென்று நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று வலுக்கட்டாயமாக கூறுவாராம். இதனை ஜெயசித்ராவே பலமுறை வெளிப்படையாக பல பேட்டிகளிலும் தெரிவித்து இருக்கிறாராம்.
அந்த சமயம் ஜெயசித்ராவை சுதாகர் மிகவும் தீவிரமாக காதலித்து வந்த காரணத்தினால் நீங்கள் இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றும் வலுக்கட்டாயமாக காதலை வர வைத்தாராம் . பிறகு ஜெயசித்ராவும் வேறு வழியின்றி சுதாகரை காதலித்தாராம். பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு 3 லட்சம் ரூபாய் இருந்தால் கொடு நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சுதாகர் கூறிவிட்டாராம்.
அதற்கு ஜெயசித்ரா நான் பல சொத்துகளை சேர்த்து வைத்திருக்கிறேன் எல்லாம் உனக்கு தானே என்று கேட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் சுதாகர் ஜெயசித்ராவை விட்டு பிரிந்து விட்டாராம். பின் சுதாகர் தெலுங்கிற்கு சென்று அங்கு ஒரு கல்லூரி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…