இந்திய இளைஞர்களின் நம்பிக்கை ஒளியாக DYFI திகழ்கிறது கர்நாடக மாநாட்டில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு..
“இந்திய இளைஞர்களின் நம்பிக்கை ஒளியாக DYFI திகழ்கிறது”, என்று பெங்களூருவில் நடந்த DYFI கர்நாடக மாநில மாநாட்டின் பொது நிகழ்ச்சியைத் துவங்கி வைத்துப் பேசிய தேசிய விருது பெற்ற திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கூறினார். “வேலையின்மைக்கும் வறுமைக்கும் எதிரான போராட்டத்தை DYFI வலுவாக நடத்தி வருவது பெருமிதம் கொள்ளத் தகுந்ததாகும். முக்கியமான பல விஷயங்களில் எதிர்வினையாற்ற வேண்டியதை விடுத்து, அற்ப விஷயங்களை உணர்ச்சிபூர்வமான முறையில் அணுகி நேரத்தை வீணடித்து வரும் சிலரது முயற்சிகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.
தவறானவர்களின் கைகளில் இந்நாட்டை ஒப்படைத்தது நமது பிரதான தவறாகும்.இத்தகைய தவறுகளால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் போராட்டத்தைத் தான் DYFI-ன் தலைமையில் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் DYFI-யுடன் நானும் என்னை இணைத்துக்கொண்டு செயல்பட விரும்புகிறேன்.” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்றும் கர்நாடகா மாநிலத்தில் காவி குண்டர்களால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொல்லபட்டதிற்கு இதுவரை ஒரு கண்டன குரல் கூட கொடுக்கவில்லை என்றும் அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க வில்லையெனில் எனது தேசிய விருதை திருப்பிகொடுக்க கூட தயங்கமாட்டேன் என்றும் அவர் கூறினர்.