dhanush and Dushara Vijayan [file image]
தனுஷ் : சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை துஷாரா விஜயன் அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கி நடித்து முடித்துள்ள ‘ராயன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் தனுஷின் 50-வது திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கி இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக படத்தில் நடித்த பிரபலங்கள் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை துஷாரா விஜயன் ராயன் படம் குறித்தும் தனுஷ் பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை துஷாரா விஜயன் ” நான் திரையில் பார்த்து ரசித்த தனுஷ் சாருடன் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். பல பேட்டிகளில் நான் சொல்லி இருக்கிறேன் எனக்கு தனுஷ் சார் தான் பிடிக்கும் என்று.
எந்த படத்தை பார்த்துவிட்டு அவர் ராயன் படத்தில் நடிக்க என்னை அழைத்தார் என்று தெரியவில்லை. சார்பட்டா பரம்பரை படத்தில் படத்தில் நான் நடித்த காட்சிகளை அவர் பார்த்ததாக சொன்னார். ராயன் படத்தில் நடிக்கும்போது என்னால் மறக்கவே முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. படத்தில் ஸ்டண்ட் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் நான் நடித்து முடித்த பிறகு தனுஷ் என்னை கட்டி பிடித்து பாராட்டினார். நமக்கு பிடித்த ஒருவர் கிட்ட இருந்து இந்த பாராட்டி வந்தது இதைவிட சிறப்பாக என்ன இருக்க முடியும் என்பது போல அந்த சமயத்தில் நினைத்தேன்” எனவும் நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…