இயக்குனர் அட்லீ பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய மூன்று படங்களுமே விஜய்க்கு சரி அட்லீக்கும் சரி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்றே சொல்லவேண்டும்.
இதில் அவர் முதலில் ராஜா ராணி படத்தை இயக்கி முடித்த பின் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இது தான் அவர் விஜய்யை வைத்து இயக்கிய முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தின் கதையை கூறுவதற்கு முன்பே அதாவது 2012-ஆம் ஆண்டே விஜய் அட்லீயிடம் தனக்கு கதை ரெடி செய்ய சொல்லி கேட்டுவிட்டாராம்.
2000 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் போட்ட அட்லீ! டாப் ஹீரோக்களை வைத்து பிரமாண்ட ஹாலிவுட் படம்?
அந்த சமயம் அட்லீ இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு விஜய்யுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்துள்ளது. நண்பன் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அன்று அட்லீயை விஜய் கேரவனுக்கு அழைத்தாராம். கேரவனுக்கு வந்தவுடன் அவருக்கு ஒரு நாற்காலியை போட சொல்லி அட்லீயை அமர சொன்னாராம்.
பிறகு அமர்ந்தவுடன் அட்லீயை பாராட்டினாராம். பாராட்டி விட்டு இந்த படத்தில் நீங்கள் உங்களுடைய கேப்டன் சொன்னதை கேட்டு நன்றாக வேலை செய்து உள்ளீர்கள். உங்களுடைய வேலை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது எனக்காக ஒரு கதை தயார் செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள் நாம் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்று கூறினாராம்.
நடிக்க மறுத்த விஜய்! கடுப்பாகி ஆண்டவர் பக்கம் தாவிய அட்லீ?
உதவி இயக்குனராக இருந்த அந்த சமயத்தில் அட்லீக்கு இது மிகவும் இன்ப அதிர்ச்சியை கொடுத்ததாம். அட்லீயை பார்த்து தனக்கு ஒரு கதையை தயார் செய்யுங்கள் என்றார் கூறிய முதல் நடிகரும் விஜய் தானாம். விஜய் தனக்கு ஒரு கதை தயார் செய்ய கூறியவுடன் அட்லீ மிகவும் உற்சாகம் அடைந்து அன்றிலிருந்து விஜயின் ரசிகராக மாறிவிட்டாராம். இந்த தகவலை அட்லீயே சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ தெரிவித்துள்ளார்.
விஜய் கூறிய பிறகு அட்லீ ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்தாக விஜய்யை சந்தித்து தெறி படத்தின் கதையை கூறி அவரை வைத்து படம் இயக்கினார். படமும் வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அட்லீக்கு விஜய்யை வைத்து மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…