‘ஹே சினாமிகா’ திரைப்படத்திற்காக தமிழில் முதல் முறையாக பாடிய துல்கர் சல்மான்..!

Default Image

மலையாள திரைப்படங்களில் அவ்வப்போது பாடல்களும் பாடிய மோலிவுட்டின் இளம் ஹீரோவான துல்கர் சல்மான், தற்போது கோலிவுட்டிலும் பின்னணி பாடகராக மாறியுள்ளார். 

தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் வலம் வருகிறார்.பிருந்தா மாஸ்டர், முதல் முறையாக இயக்கிவரும் ‘ஹே சினாமிகா’ என்ற தமிழ் திரைப்படத்தில் துல்கர் சல்மான்,காஜல் அகர்வால், அதிதி ராவ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் ஒரு பாடலை துல்கர் சல்மான் பாடியுள்ளார்.துல்கர் தமிழில் பாடும் முதல் பாடல் இதுவே ஆகும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ள முதல் படம் ‘ஹே சினாமிகா’ என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்,பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார்.கார்க்கியின் வரிகளில் துல்கர் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

2013 இல் வெளியான மலையாள திரைப்படமான ‘ஏபிசிடி’ மூலம் துல்கர் பின்னணி பாடகராகவும் அறிமுகமானார்.பின்னர்,மலையாளத்தில் வெளியான சார்லி படத்தில் சுந்தரி பெண்ணை பாடலை பாடினார்.இப்பாடலானது தமிழ்,மலையாளம்,தெலுங்கு போன்ற அனைத்து சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது.துல்கர் சல்மான்,இதுவரை 8 பாடல்களை மலையாளத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,தமிழில் முதல் முறையாக பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் துல்கர் சல்மானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் துல்கர் பாடல் பாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
Donald Trump - War
donald trump benjamin netanyahu
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump