போலீஸ் கதாப்பாத்திரத்தில் களமிறங்கி கலக்கவிருக்கும் துல்கர் சல்மான்!
நடிகர் துல்கர் சல்மான் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மம்முட்டியின் மகனாவார். இவர் மலையாளத்தில் செக்கண்டு சோவ் என்ற படத்தில் நடித்ததன் மூலம்த்திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், ஒவ்வொரு கதாநாயகனும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பது, அதிரடியும், அடிதடியும் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிப்பதால் தான். அதிலும் கதாநாயகர்கள் போலீசாக நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைப்பதுண்டு.
இந்நிலையில், ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ, காயன்குளம் கொச்சுண்ணி போன்ற படங்களை இயக்கிய, ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில், துல்கர் சல்மான் முழு நீள போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.