தமிழில் அவன் இவன், தேகிடி, பலூன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜனனி . பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பிரபல தனியார் நிகழ்ச்சியான பிக் பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானார். நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட தனக்கென்று ஒரு ரசிகர்களை பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் என்றே கூறலாம்.
பிறகு நிகழ்ச்சியை விட்டு வெளியேவந்தடவுன் மலையாளத்தில் சில படங்களில் தமிழில் சில படங்களிலும் நடித்தார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான வேழம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரமுமும் பலருக்கு பிடித்திருந்தது.
இதனை தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடிகை ஜனனி புதியதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். தற்போது சில படங்களில் அவர் நடித்து வந்தாலும் கூட பெரிதாக சொல்லும் படி பெரிய படங்களில் நடிக்கவில்லை.
எனவே, ஒரு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினால் அதன் மூலம் வருமானம் வரும் என எண்ணி இந்த முடிவை ஜனனி எடுத்துள்ளார். (Janani Official) என்ற பெயரில் சேனலை தொடங்கி அதற்கான வீடியோ ஒன்றையும் வெளியீட்டு தனக்கு ஆதரவு அளிக்கும் படி ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த விடியோவையும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவையும் கொடுத்து வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…