நடிகை சமந்தா தற்போது “சாகுந்தலம்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள, இந்த திரைப்படத்தை படக்குழுவினருடன் சேர்ந்து நேற்று பார்த்த நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் ” “சாகுந்தலம்” படம் கண்டிப்பாக குடும்ப பார்வையாளர்களுக்கு பிடிக்கும். இப்படி அழகான படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகருக்கு நன்றி ” என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் , தற்போது அதனை தொடர்ந்து நடிகை சமந்தா மற்றும் “சாகுந்தலம்” படக்குழுவினர் சிலர் ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு படம் வெற்றி பெறுவதற்காக சமந்தா சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
அதற்கான புகைப்படங்களையும் “சாகுந்தலம்” படத்தின் தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த சமந்தா தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் ” ஏப்ரல் 14ஆம் தேதி சாகுந்தலம்!! என்னுள் இருக்கும் சிறுமி மகிழ்ச்சியில் கதறுகிறாள்.. என் வாழ்நாள் முழுவதும் டிஸ்னி திரைப்படங்களை நேசித்தேன், இறுதியாக தோற்றமளிக்கும் ஏதோ ஒரு பகுதியாக இருக்க வேண்டும் டிஸ்னி.. கனவு நனவாகும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…