சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், அவர் தனது உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது.
அந்த பதிவை வன்மையாக கண்டித்த ஒரு மருத்துவர், சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஜெயிலில் போட வேண்டும் என கூறினார். இப்பொது, டாக்டர் அவ்வாறு கூறியதற்கு சமந்தா வேதனையுடன் கேள்வி கேட்டு இன்ஸ்டாகிராமில் நீண்ட விளக்கத்தை சுமார் 3 பக்கங்களுக்கு கொடுத்துள்ளார்.
சமந்தாவின் சர்ச்சைக்குள்ளான பதிவு :
பொதுவான வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷனைப் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைத்திருந்தார், மேலும் அவர் சிகிச்சையில் ஈடுபடும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.
மருத்துவரின் பதிவு :
ஹெபடாலஜிஸ்ட் இந்த நெபுலைசேஷன் முறை, ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியது மட்டுமல்லாமல், சமந்தாவை “உடல்நலம் மற்றும் அறிவியல் படிப்பறிவற்றவர்” என்று கூறினார். அதோடு, இது போல பொது சுகாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக நடிகைக்கு “அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது ஜெயிலில் தள்ளப்பட வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
சமந்தாவின் விளக்கம் :
கடந்த இரண்டு ஆண்டுகளில், நான் பல வகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. நான் கடுமையாக அறிவுறுத்தப்பட்ட அனைத்தையும் முயற்சித்தேன். இந்தச் சிகிச்சைகள் பலவும் மிகவும் விலை உயர்ந்தவை. நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்.
தற்போது இருக்கும் மருத்துவ முறைகள் மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது. அனைவராலும் இவ்வளவு செலவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. என்னை போல இந்த நோயின் தாக்கத்தினால் அவதிப்படுபவர்களுக்கு உதவவே இந்த பதிவுகளை வெளியிடுகிறேன். இது பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுவது அல்ல என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஆனால், ஒரு ஜென்டில்மேன் ஒரு மருத்துவர் எனது பதவியையும் எனது நோக்கங்களையும் வலுவான வார்த்தைகளால் தாக்கியுள்ளார். ன்றும் கூறினார். அவருடைய நோக்கங்கள் உன்னதமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் தனது வார்த்தைகளால் தூண்டிவிடாமல் இருந்திருந்தால், அது அவருக்கு இரக்கமாகவும் இருந்திருக்கும். குறிப்பாக நான் சிறையில் தள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சிறையில் அடைக்கும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்? எனது உடல்நிலை பாதிப்பிற்கான சிகிச்சைக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எந்த பயனும் இல்லை. ஆனால், மாற்றுமுறை மருத்துவத்தில் எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது எனக்கு பலன் கிடைத்த மாற்றுமுறை மருத்துவத்தை ரசிகர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.
இந்த சிகிச்சையை டிஆர்டிஓவில் 25 ஆண்டுகள் பணியாற்றிய உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு பிரபலமாக இல்லாமல் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒருவனாக பதிவிட்டுள்ளேன். எனினும் எதிர்காலத்தில் கவனத்துடன் பதிவுகளை வெளியிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…
கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்,…
சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்.. நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற…