சாகும் முன் தேதியை குறித்த டாக்டர்.! பிஜிலியின் உருக்கமான கடைசி பதிவு!
சென்னை : கல்லீரல் செயலிழப்பால் உயிரிழந்த பிஜிலி ரமேஷ், இறப்பத்ற்கு முன்பு அவர் கண்ணீருடன் பேச முடியாமல் பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான “பிஜிலி ரமேஷ்” இன்று அதிகாலை காலமானார். சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான இவர், தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார்.
கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது 46 வயதில் மதுவினால் இந்த முடிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த மாதம் அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அகில், “இனியும் என்னால் முடியாது, டாக்டர் சொல்லிட்டாரு. குடி தான், நான் குடிச்சவன் தான், யோக்கியன் கிடையாது. ஒரு நேரத்தில் மாறிமாறி குடிச்சோம். இப்போதான் பிஜிலி ரமேஷ்னு அனைவருக்கும் தெரிய ஆரமிக்கிறது.
அதுல இருந்து பப்ளிக் ஆ.. வைன் ஷாப்புக்கு போறது இல்ல, கடந்த ஒரு வருடமாக நிறுத்திவிட்டேன். திருமணத்திற்கு முன்பு நான் நல்லா குடித்தேன், அது தான் இப்போ வேலை செய்கிறது. என் உடல் நிலை ரொம்ப மோசமாக உள்ளது. வண்டி ஓடும் வரை ஓடும் என நான் சொல்லல, மருத்துவர்களே சொல்லிவிட்டார்கள்.
இருக்கிற வரை என் மனைவி, புள்ளைகளுடன் சந்தோசமாக வாழனும் என்று கண்ணீருடன் கூறிய அவரிடம், தினமும் குடிக்கிறவங்களுக்கு ஏதாச்சும் சொல்லுங்க என தொகுப்பாளர் கேட்டதற்கு, “குடிக்க வேண்டாம் என்று சொல்லுகின்ற தகுதி எனக்கு இல்லை, அதற்கான தகுதியை இழந்துவிட்டேன்” என பேச கூட முடியாமல் திணறி திணறி பேசினார்.