கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் டிரீட் …பொன்னியின் செல்வனோடு சர்தார்..? விவரம் உள்ளே.!

Default Image

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

PonniyinSelvan

இதற்கிடையில், கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மற்றோரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், அவர் நடித்து முடித்துள்ள சர்தார் படத்தின் டீசர் நாளை பொன்னியின் செல்வன் படத்தோடு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்களேன்- 40 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா…டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரேயா.. வைரலாகும் புகைப்படங்கள்.!

Sardar

இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படம் நாளை வெளியாகும் நிலையில், அத்துடன் சர்தார் படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதால் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.

Sardar teaser

சர்தார் படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வரும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்