அட இவரு டான்ஸ் மாஸ்டர் கிடையாதா? ப்ரோட்டா மாஸ்டரா?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிகழ்ச்சியில், 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வனிதா வருகை தந்துள்ளார்.
இதனையடுத்து, தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட, சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மாஸ்டராக வருகை தந்த சாண்டி, தற்போது புரோட்டா மாஸ்டராக மாறியுள்ளார்.